சாய் பாபா பாடல் ”யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே”

#spiritual #Holy sprit #Saibaba
சாய் பாபா பாடல் ”யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே”

யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே
படிக்கின்ற பேருக்கு நலம் நல்குமே
யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே
படிக்கின்ற பேருக்கு நலம் நல்குமே

வெற்றிகளை தந்திடும் பாராயணம்
வினைகளை விலக்கிடும் அவரபயமே
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்

யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே..
கணபதியை முதன் முதலில் தினம் பணிய வேண்டுமே
பிறகு பாபா பதமே பூஜித்து வணங்கு நீ
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்

மகிமை மிகு கிரண்டமே பக்தியுடன் படிப்போமே…
ஆக இருள் விலகிடவே ஆரத்தி தருவோமே
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்

யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே…

ஓரேழு நாட்களில் கிரண்டம் நாம் படித்து
தூப தீபமே காட்டி நெய்வேத்தியமே செய்து
ஏழை எளியவரை அன்புடனே நாம் அழைத்து
அன்னதானமே செய்து சாயி கிருபை பெறுவோமே
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்

யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே..

ஒரு பொழுது தான் உண்டு தரையிலே தான் உறங்கி
பட்டற்ற நிலையிலே ஆசைகள் தான் துறந்து
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்

கிரண்டம் முழுவதும் படித்து தூய மிகு மறுநாள்
தவபலனை பெற்று சுகங்களை அடைவோமே
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் சாயிராம்யுகபுருஷனாம் சாயி சத்சரிதமே…

மேலும் ஆன்மீகம் தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்

 

 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4